மணல் திருடியவர் டிராக்டருடன் கைது

கொள்ளிடம், ஜன.10:  கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடியவர் டிராக்டருடன் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பாலுரான்படுகை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (22). இவருக்கு சொந்தமான டிராக்டர் மூலம், நேற்று கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தார்.  தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று குன்னம் என்ற இடத்தில் டிராக்டரை மடக்கி பிடித்து டிராக்டர் மற்றும் டிரெய்லரை மணலுடன்  பறிமுதல் செய்தனர். மேலம், டிராக்டரை ஓட்டி வந்த ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED சிவகிரி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்