திருட்டை கட்டுப்படுத்த நகைக்கடை அதிபர்களுடன் போலீசார் ஆலோசனை

திருத்தணி, ஜன. 10: திருத்தணி காவல் நிலையத்தில், அடகு மற்றும் தங்க நகை கடைக்காரர்களின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் குமார் வரவேற்றார். இதில்,  டிஎஸ்பி., சேகர்  பேசுகையில், திருத்தணி கோயில் நகரம் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் தினமும் வந்து செல்கின்றனர். நகரில் குற்றங்களை தடுக்க அடகுகடை மற்றும் தங்க நகைக்கடை வைத்திருப்பவர்கள் கட்டாயம் இரண்டு கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கவேண்டும். ஒரு கேமிரா கடைக்கும், மற்றொரு கேமிரா சாலை மற்றும் தெரு தெரியும் வகையில் பொருத்த வேண்டும். மேலும் கடைகளில் அலாரம் அமைக்க வேண்டும்.
இதுதவிர, நகை வாங்குபவர்கள், அடகு வைக்க வருபவர்களை நன்றாக கண்காணித்து சந்தேகம் இருந்தால், உடனடியாக காவல் நிலையத்திற்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோல், கடைக்காரர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் திருட்டு சம்பவங்கள் தடுப்பதுடன், குற்றச்செயல்கள் எதுவும் நடக்காது. இரவு நேரத்தில் கட்டாயம் மின்விளக்குகள் அமைத்தும், வாட்ச்மேன் நியமித்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

× RELATED வர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு