சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்

தரங்கம்பாடி, ஜன.10:தரங்கம்பாடி வட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்க 37ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பேரவை கூட்டம் பொறையாறில் நடந்தது.
சங்க தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். நாகை மாவட்ட துணை தலைவர் ஸ்வீட்ராஜ் சங்க கொடி ஏற்றினார். செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன் வரவேற்றார். செயலாளர் சுப்பிரமணியன் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்தார்.
கூட்டத்தில் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ பவுன்ராஜ் மூத்த உறுப்பினர்களை கவுரவப்படுதினார். கூட்டத்தில் தமிழக அரசு ஓய்வுபெற்ற அலுவலர் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு அளித்து வரும் குடும்ப பாதுகாப்பு நிதி தொகையை 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு வழங்கும் மருத்துவபடி ரூ.1000 மாநில அரசும் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்றோர் குடும்பங்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ஓய்வு பெற்றோர்கள் எந்த மருத்துவமனையிலும், எந்த வியாதிக்கும் சிகிச்சை பெறலாம் என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும். மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். நிறுத்தபட்ட தரங்கம்பாடி - மயிலாடுதுறை ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

× RELATED சட்டமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்