திருவள்ளூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர், ஜன. 10: திருவள்ளூரில், நாளை (11ம் தேதி) காலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் தேவையாக இருப்பதால், அப்பணியிடங்களுக்கு வேலை ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி படித்தவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். மேற்காணும் தகுதியும் விருப்பமும் உடையவர்கள், நாளை (11ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவள்ளுரில் நடைபெறும் தனியார்துறை  வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

× RELATED நெல்லையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்