மின்னணு வாக்கு இயந்திரங்கள் செயல்பாடு விழிப்புணர்வு முகாம்

காரைக்கால், ஜன.10: காரைக்கால் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் காரைக்காலில் நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கல்லூரி மாணவர்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் விதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, காரைக்கால் நகராட்சி கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமை மாவட்ட உதவி வாக்காளர் பதிவு அதிகாரி பொய்யாத மூர்த்தி தொடங்கி வைத்தார். பயிற்சியை கல்லூரி விரிவுரையாளர்கள் பாபு அசோக், செந்தில்வேல், சகாய லூகாஸ் சுந்தர், கார்த்திகேயன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தேர்தல் துறை கண்காணிப்பாளர் புஸ்பநாதன் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

× RELATED சட்ட விழிப்புணர்வு முகாம்