பேன்சி வாகன பதிவு எண்கள் ஏலம் விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம்

காரைக்கால், ஜன.10: காரைக்கால் வட்டார போக்குவரத்து துறை சார்பில், பேன்சி வாகன பதிவு எண்கள் ஏலம் நடைபெறயிருப்பதால், விருப்பம் உள்ளோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் வட்டார போக்குவரத்து  துறை அதிகாரி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
காரைக்கால் வட்டார போக்குவரத்து துறையின் பேன்சி வாகன பதிவு எண்களை பி.ஒய்(PY-02 T) parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் 8.1.2019 காலை 10 மணி முதல் 14.1.2019 மாலை 4 மணி வரை ஏலம் விட இருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் கடவுச்சொல்லை parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் மூலமாக 8.1.2019 முதல் 10.1. 2019 வரை பதிவுசெய்துகொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட பெயர் கடவுச் சொல்லை வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட எண்களுக்கான பதிவு எண்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டும் 11.1.2019 காலை 10 மணி முதல் 14.1.2019 மாலை 4 மணிவரை ஏலத்தில் பங்கு பெறலாம். இந்த இ-டெண்டர் முறையில் பங்குபெற விரும்பும் பொதுமக்கள் அதற்கான விதிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை 8.1.2019 முதல் transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும் மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப தொகையின் விபரம், ஏல நிபந்தனைகள் குறித்த விபரங்கள் போக்குவரத்து துறை அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பணவர்த்தனை அனைத்தும் ஆன் லைன் மூலம் இணையதள வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக்கொள்ளப்படாது. இத்திட்டமானது புதுச்சேரியில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் பெற வேண்டும் என்ற நல்ல சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களும் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

× RELATED ஜப்பானில் இப்படியும் ஒரு போட்டி: சக்கர...