நாகையில் மணல் கடத்திய இருவர் கைது

நாகை. ஜன.10:  நாகையை அடுத்த நாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ்சார் நாகூர் கிழக்குகடற்கரை சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது நாகூர் வெட்டாற்று பாலம் அருகே வந்துகொண்டிருந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் நரிமணம் வெள்ளபாக்கம் கீழ தெருவை சேர்ந்த ராஜேஷ் (34), உத்தமசோழபுரத்தை சேர்ந்த ஆனந்த் (28) ஆகிய இருவரையும் கைது
செய்தனர்.

× RELATED கலெக்டரிடம் வியாபாரிகள் மனு தா.பேட்டை ...