கோயிலில் இருந்த கேமராக்கள் திருட்டு

உளுந்தூர்பேட்டை, ஜன. 10:  உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கிளியூர் கிராமம். இந்த கிராமத்தில் மிகவும் பழமையான சுந்தரமகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகள் முடித்துவிட்டு கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் கோயில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது ரூ. 1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் திருடு போனது தெரியவந்தது. மேலும் கோயிலுக்கு சொந்தமான முக்கிய ஆவணங்களும் திருடு போனதாக தெரிகிறது.இது குறித்து கிராமத்தை சேர்ந்தவர்கள் திருநாவலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோயிலில் அடிக்கடி திருடு சம்பவங்கள் நடைபெற்று வருவது கிராமத்தில் உள்ள பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


× RELATED குமரி அருகே 4 துறைமுகங்களில் தொடர்...