கூட்டு பண்ணைய திட்ட பயிற்சி

சின்னசேலம், ஜன. 10:    சின்னசேலம் தாலுகாவிற்கு உட்பட்ட ராயப்பனூர் கிராமத்தில் சின்னசேலம் வட்டார அட்மா திட்டம் சார்பில்  கூட்டு பண்ணைய திட்ட பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(ஓய்வு) ரத்தினசபாபதி தலைமை தாங்கி பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். இதில்  வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(ஓய்வு) பிச்சமுத்து கலந்து கொண்டு வேளாண்மைத்துறையில் அரசின் சலுகைகள், திட்டங்கள் குறித்தும் நவீன வேளாண்மை யுக்திகள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.  வட்டார அட்மா தொழில் நுட்ப மேலாளர் மவிசுதா வேளாண்மையில் அட்மா திட்ட பணிகள் குறித்தும், கூட்டு பண்ணையதிட்ட பயிற்சி குறித்தும் விளக்கி பேசினார். வேளாண்மை உதவி அலுவலர்கள் தியாகராஜன், மினிகவுதமி ஆகியோர் கூட்டு பண்ணையத்தின் சிறப்பு அம்சங்கள், பதிவேடுகளை பராமரிக்கும் முறைகள் குறித்து பேசினார்கள். அட்மா உதவி மேலாளர்கள் ஜெயபாலன், அன்பு ஆகியோர் உழவன் செயலி பயன்பாடுகள், பயிர் பாதுகாப்பீட்டு திட்டம் பற்றி பேசினார்கள். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: