பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

சின்னசேலம், ஜன. 10:   கச்சிராயபாளையத்தில் உள்ள அரசு டிஎன்பில் தொழிற்சாலையில் உதவி பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் தொழிலாளர்கள், ஓட்டுநர்களுக்கான பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.   தொழிற்சாலையின் தலைமை பாதுகாவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆலையின் ஆய்வக அலுவலர் தேவராஜ் முன்னிலை வகித்தார். இதில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், பாதுகாவலர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாலமுருகன் பேசும்போது அரசு மனித பாதுகாப்பு அவசியம் கருதி பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

 மட்காத பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் நீர்வளம் பாதிக்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மட்காத பிளாஸ்டிக்கால் மண்வளமும் பாதிக்கப்படுகிறது. ஆகையால் இனிவரும் காலங்களில் ஆலை வளாகத்தில் யாரும் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று அறிவுரை வழங்கினார். இதில் பாதுகாவலர்கள் விக்கிரமாதித்தன், சூப்பர்வைசர் ஆற்றலரசன் உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  × RELATED மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது