கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி, ஜன. 10: விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி, காணை இடைக்குழு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முண்டியம்பாக்கம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழுப்புரம் வட்ட செயலாளர் நிதானம், காணை ஒன்றிய செயலாளர் ராமநாதன், வட்டக்குழு ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விக்கிரவாண்டி நகர செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வருகிற சாலை குண்டும் குழியுமாக உள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்த டாக்டர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் கலியமூர்த்தி, நிர்வாக குழு சகாபுதீன், வளர்மதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட விவசாய சங்க துணை தலைவர் மாசிலாமணி, துணை செயலாளர் மூர்த்தி, காணை ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: