பொங்கல் பரிசு வழங்கல்

திண்டிவனம், ஜன. 10:   திண்டிவனம் 16வது வார்டு உதயநகர் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 16வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாலசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளரும் முன்னாள் நகர்மன்ற தலைவருமான வெங்கடேசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ. 1000 வழங்கி துவக்கி வைத்தார். இதில், 16வது வார்டு அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகம், சரவணன், தீர்த்தகுளம் குமரன், உதயநகர் கனகராஜ், புஷ்பநாதன், வேலுநாதன், சசிகுமார், விற்பனையாளர் சற்குணம் உட்பட கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: