விழிப்புணர்வு பேரணி.

நெல்லிக்குப்பம், ஜன. 10: நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரோஸ்கண்ணன், மாவட்ட கல்வி துணை அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரஹிமுனிசா பேகம், பள்ளி துணை தலைமை ஆசிரியை ஜெயந்தி உள்பட  ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

× RELATED விழிப்புணர்வு பேரணி