திமுக நடத்திய ஊராட்சி சபை கூட்டம்

பண்ருட்டி  ஜன. 10: பண்ருட்டி அருகே திருவாமூர், காமாட்சிப்பேட்டை, எலந்தம்பட்டு  சிறுவத்தூர், எஸ்.ஏரிப்ப ாளையம் ஆகிய கிராமங்களில் திமுக சார்பில் ஊராட்சி  சபை  கூட்டம் நேற்று நடந்தது. நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமை  தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மத்திய, மாநில அரசுகளின்  குறைகளை எடுத்துக்கூறினர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர்  தா.கிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர்கள் அரிராமச்சந்திரன்,  பலராமன்,  அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ராஜசேகர், வழக்கறிஞர் ஜெகஜீவன்ராமன், ஊராட்சி செயலர் சிற்றரசு, காசிராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


× RELATED பிரதமரிடம் திமுக மனு