ராணிப்பேட்டையில்மணல் கடத்திய 2 பேர் கைது

ராணிப்பேட்டை, ஜன.10: ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் நேற்று காரை, பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரித்தனர். இதில், பாலாற்றில் இருந்து  மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.  இதையடுத்து தெற்கு ரயில்வே ஸ்டேசன் ரோட்டை சேர்ந்த சரத்குமார்(26), ஜெயராம்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மற்றொரு சரத்குமார்(28) ஆகியோரை கைது செய்து, மணலுடன் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

× RELATED போலீசில் பொதுமக்கள் புகார் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்