குடியாத்தம் டாஸ்மாக் கொலை வழக்கு அடிக்கடி மது கேட்டு தகராறு செய்ததால் வெட்டிகொலை செய்தோம்


குடியாத்தம், ஜன.10 குடியாத்தம் டாஸ்மாக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அடிக்கடி மது கேட்டு தகராறு செய்ததால் வெட்டி கொலை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்தனர்.   குடியாத்தம் அடுத்த ஆர்எஸ்.நகரை சேர்ந்தவர் உதயசூரியன்(24), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் சுமன் மற்றும் சிலருடன் குடியாத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுகுடித்தனர். அப்போது, செதுக்கரையை சேர்ந்த ராஜா, ரமேஷ், ஆர்எஸ் நகரை சேர்ந்த மகேந்திரன் ஆகியோரும் அங்கு மது குடித்திருந்தனர்.

அப்போது, உதயசூரியனுக்கும், ராஜா, ரமேஷ், மகேந்திரன் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உதயசூரியன், ராஜாவை தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள், அவர்களை விலக்கிவிட்டனர். இதையடுத்து, உதயசூரியன் பைக்கில் வீடு திரும்பினார். குடியாத்தம் சக்திநகர் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த ராஜா, ரமேஷ், மகேந்திரன் ஆகியோர், உதயசூரியனை வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மறைத்து வைத்திருந்து கத்தியால் உதயசூரியனை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் உதயசூரியன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி பிரகாஷ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர ேதடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது குடியாத்தம் பகுதியில் பதுங்கியிருந்த மகேந்திரனை கைது செய்தனர். இதையடுத்து ராஜாவும், ரமேசும் திருவலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜா, ரமேஷ் ஆகியோரை நேற்று அதிகாலை கைது ெசய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், உதயசூரியன் அடிக்கடி மது வாங்கி தரும்படி கேட்டு தகராறு செய்வாராம்.

இதேபோல் நேற்று முன்தினமும் தகராறு செய்ததால் இந்த கொலை நடந்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, கைதான 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED ரவுடி கொலை வழக்கில் கோர்ட்டில் வாலிபர் சரண்