பஸ் மோதி பெண் தொழிலாளி பலி

ஆற்காடு, ஜன.9: திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகுழந்தை(56). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 6ம் தேதி கட்டிட வேலைக்காக ஆற்காட்டிற்கு பஸ்சில் வந்து அவர், பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றார்.அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் சின்னகுழந்தை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆற்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சி