கல்லூரி மாணவி மாயம்

நாட்றம்பள்ளி, ஜன.9: நாட்றம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 6ம் தேதி கல்லூரியில் சிறப்பு வகுப்பு நடப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லையாம்.இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

× RELATED கல்லூரி மாணவி மாயம்