வாணியம்பாடி அருகே விவசாயி தற்கொலை

வாணியம்பாடி, ஜன.9: வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(58), விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணவேணி நிலத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டுக்குள் ஜெகநாதன் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததை பார்த்து அதிர்சியடைந்தார்.இதுகுறித்த, புகாரின்பேரில் திம்மாம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்