வேலூர் அருகே செல்போன் பறித்த வாலிபர் கைது

வேலூர், ஜன.9: வேலூர் அருகே செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் மவுளிசங்கர்(22), இவர் கடந்த 6ம் தேதி சத்துவாச்சாரிக்கு உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள தனியார் திருமண மண்டபம் வழியாக செல்போன் பேசிய படி நடந்து சென்றாராம்.அப்போது முகவரி கேட்பது போல் பைக்கில் வந்த வாலிபர் திடீரென ₹20ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம்.இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், செல்போன் பறித்த வாலிபர் சத்துவாச்சாரி மலையடிவாரம் இந்திராநகரைச் சேர்ந்த வினோத்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வினோத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

× RELATED மணப்பாறையில் கட்டணம் செலுத்தாத செல்போன் டவர் மின் இணைப்பு துண்டிப்பு