×

தேசிய பசுமைப்படை மாணவர்கள் இயற்கை சுற்றுலா

அரியலூர், டிச.28: அரியலுார் அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான இயற்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  முகாமின் முக்கிய செயல்பாடான இயற்கை சுற்றுலாவினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி கொடியைத்து தொடக்கி வைத்தார். வங்காரத்தில் உள்ள காட்டு பகுதிகள், கீழப்பழுவூர் நர்சரி கார்டன், கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவ, மாணவிகள் பின்னர் வாரணவாசி தொல்பொருள் அருங்காட்சியகம், காட்டுப்பிரிங்கியம் பகுதியிலுள்ள புதைந்துள்ள படிக வகை பாறைகள், படிமப் பொருள்களை பார்த்தனர். அங்கு புவியியாளர் சந்திரேசகர் படிக வகை பாறைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விளக்கினர்.

மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், மாவட்ட கல்வி அலுவலர் ஹரி.செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன், மாவட்ட வனசரகர் குமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன், பள்ளித் துணை ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணபாலினி செய்திருந்தார்.

Tags : National Green School ,
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...