×

திருச்சியில் டிஆர்இயூ தொழிற்சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து பணி

திருச்சி, டிச.19: திருவாரூரில் உள்ள டிக்கெட் பரிசோதகர் அலுவலகத்தை காரைக்காலுக்கு மாற்றுவதை கண்டித்து திருச்சியில் கோட்ட டிஆர்இயூ சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து பணி செய்தனர். திருவாரூரில் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் பரிசோதகர் அலுவலகத்தை காரைக்காலுக்கு மாற்றுவதை கண்டித்தும், பதவி உயர்வு பெற்ற எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்த  2 பேரை பதவி இறக்கம் செய்த திருச்சி கோட்ட முதுநிலை வணிக  மேலாளரை கண்டித்து திருச்சி கோட்ட டி ஆர் இ யு சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். திருச்சியில் ரயில் முன்பதிவு மையம், ரயில் இன்ஜின் டிரைவர், ரயில் நிலையங்கள் என சங்கத்தை சேர்ந்த 80க்கு மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து பணி செய்தனர்.

Tags : Trichy ,TRUU ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்