×

அன்பில், தொட்டியம் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

லால்குடி, டிச 19:  வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி அன்பில் மற்றும் தொட்டியம் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் அமைந்துள்ளது சுந்தரராஜபெருமாள் கோயில். இக்கோயில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குட்பட்ட உபகோயிலாகும். 108 வைணவ திவ்ய தேச திருத்தலங்களில் இக்கோயில் 4ம் இடத்தில் உள்ளது. இக்கோயில் பித்துரு தோஷங்களை நிவர்த்தி செய்யும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று கர்ப்பக விருட்ச வாகனத்தில் நீலமுடி கிரீடம் அணிந்து மார்பில் மகாலெட்சுமி பதக்கத்துடன் சுந்தரராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு கோயில் மூலஸ்தானத்திலிருந்து நேற்று அதிகாலை நடந்தது பெருமாள் ராஜ அலங்காரத்தில் கோயிலின் உள்பிரகாரங்களின் வழியாக வந்து சொர்க்க வாசலில் நுழைந்தார்.

27ம் தேதி தீர்த்தவாரியும், நம்மாழ்வார் மோட்ஷமும் நடைபெறுகின்றன. நிகழ்ச்சிகளை இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவில் அன்பில், மங்கம்மாள்புரம், ஜங்கமராஜபுரம், நடராஜபுரம், அரியூர், லால்குடி, பூவாளூர், காட்டூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொட்டியம்:   தொட்டியம் அருகே திருநாராயணபுரத்தில் வேதங்களை தலைக்கு வைத்து பள்ளிகொண்ட நிலையில் காட்சி அளிக்கும் வேதநாராயணபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 8ம்தேதி தொடங்கிய பகல்பத்து உற்சவத்தை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் நடைபெற்றது. நேற்று அதிகாலை வேதநாராயண பெருமாள் சொர்க்கவாசல்  வழியாக எழுந்தருளி ஆழ்வார்களுக்கு எதிர்சேவை சாதித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வேதநாயகி தாயார் மற்றும் உபநாச்சியார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து சுவாமியை வழிபட்டனர்.

Tags : paradise ,opening ,Thumiyam Perumal ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு