6 விமான நிலையங்கள் தனியார் மயம் கண்டித்து திருச்சியில் விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச. 19:  6 விமான நிலையங்கள் தனியார்மயம் ஆக்கும் முயற்சியை மேற்கொள்ளும் மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியா முழுவதும் 123 விமான நிலையங்கள் உள்ளது. இதில் திருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி, ஜெய்ப்பூர், அகமதாபாத், லக்னோ ஆகிய 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதை கண்டித்து விமான நிலைய ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த வாரம் 3 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று திருச்சி விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் யுவராஜேஷ் தலைமையில் மதிய உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோஷமிட்டனர். தொடர்ந்து இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 28ம் தேதி ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.

Related Stories: