திருவிடைமருதூர் பகுதிகளில் பொங்கல் பானை தயாரிப்பு பணி தீவிரம்

திருவிடைமருதூர், டிச. 19: தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் முதன்மையானது பொங்கல் பண்டிகையாகும். இந்த பண்டிகைக்காக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், கருப்பூர், திருநாகேஸ்வரம், செட்டிமன்டபம், சுந்தரபெருமாள் கோயில், திருவிடைமருதூர், பந்தநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு அளவுகளில் பொங்கல் பானை, அடுப்பு வகைகள், சாம்பார் சட்டி உள்ளிட்ட மண்பாண்டங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், வழக்கத்தைவிட இந்தாண்டு மண்பாண்ட உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த காலங்களில் உற்பத்திக்கு தேவையான மண் இலவசமாக கிடைத்தது. தற்போது மண்ணை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பாரம்பரியமாக இத்தொழிலை மட்டுமே செய்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு எளிதாக மண் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நலிந்து வரும் மண்பாண்ட தொழிலை காப்பாற்ற மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: