போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரிப்பு

திருக்கனூர், டிச. 18:  புதுச்சேரி காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல், சைபர் கிரைம், மகளிர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் குற்ற வழக்குகளை சட்டம் ஒழுங்கு போலீசாரும், சாலை விபத்துகளை போக்குவரத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். ஆனால், கிராமப்புற காவல்நிலையங்களில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை குற்ற வழக்குகள் மற்றும் போக்குவரத்து வழக்குகளை சட்டம் ஒழுங்கு போலீசாரே பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் நகரப்பகுதியை தொடர்ந்து கிராமப்புறங்களிலும் சாலை விபத்துக்கள, போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் போக்குவரத்து காவல் பிரிவு கிழக்கு, வடக்கு, தெற்கு என விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, வில்லியனூரில் தெற்கு போக்குவரத்து காவல்நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு திருக்கனூர், வில்லியனூர், நெட்டப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் விபத்துகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் திருக்கனூர், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகள் வில்லியனூரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்திலிருந்து 20 கி.மீ. தூரத்துக்கு மேல் உள்ளன. இப்பகுதிகளில் சாலை விபத்துகள், போக்குவரத்து நெரிசலை ஏற்பட்டால், பொதுமக்கள் வில்லியனூரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள காவல்நிலையங்களுக்கு போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். உடனே காவல் நிலையத்திலிருந்து ஒரு காவலர் சம்பவ இடததுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த காவலர் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்து காவலர் வரும் வரை பணியில் ஈடுபடும் நிலை

உள்ளது.

இதுபோன்ற காரணங்களால் திருக்கனூர், நெட்டப்பாக்கம் போன்ற பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டால் அதனை அப்புறப்படுத்த ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகி விடுகிறது. அதற்கு பொதுமக்கள் ஆத்திரமடைந்து விபத்து ஏற்படுத்திய வண்டியை உடைப்பது, சாலை மறியலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர். புதுவை எல்லையாக உள்ள திருக்கனூர் பகுதியில் 10 திருமண நிலையங்களுக்கு மேல் உள்ளன. குறிப்பாக, முகூர்த்த நாட்களில் காலை, மாலை நேரங்களில் திருக்கனூர் கடை வீதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அப்போது டிராபிக் போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது திருக்கனூர் காவல் நிலையத்திலும் காவலர் பற்றாக்குறை இருப்பதால்,

அங்கிருந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு காவலர்களை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது புதுவையில் நகரப்பகுதியை தொடர்ந்து கிராமப்புறங்களிலும் சாலை விபத்துக்கள், போக்குவரத்து நெரிசலை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் ெபாதுமக்களும், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  எனவே, புதுவை அரசு கிராமப்புற பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் தனியாக போக்குவரத்து காவல் பிரிவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கனூர் கடை வீதியில் மாலை நேரங்களில் ஏற்படு–்ம போக்குவரத்தை சரி செய்ய 2 போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

வைத்துள்ளனர்.

Related Stories: