மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வை-பை டவர்கள்

புதுச்சேரி, டிச. 18:  புதுச்சேரி  கடற்கரை சாலையில் தனியார் செல்போன் நிறுவனம் வை-பை டவர் அமைப்பதற்கான  பணிகளில் இறங்கியுள்ளது. இதனை எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரின் பாராளுமன்ற செயலர்  லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்திரிக்கு  கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் 25க்கும்  மேற்பட்ட வை-பை டவர்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை துவங்கியுள்ளது. இது  புதுச்சேரியின் அழகை கெடுப்பதோடு, கடற்கரை மேலாண்மை சட்டத்துக்கு  எதிரானது. இதுபோன்று அதிகப்படியான செல்போன் கோபுரங்களால் வெளியிடப்படும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல்  பாதிப்புகள் ஏற்படும்.

காலை, மாலை நேரங்களில்  கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்கள் கடற்கரை  சாலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த செல்போன் கோபுரங்கள்  அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சென்னை கடற்கரையில் இதுபோன்று டவர்கள்  அமைக்க அனுமதியில்லை. இதனால் புதுச்சேரியை பரிசோதனை கூடமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அனுமதியை யார் கொடுத்தது  என்பது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: