புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சை, டிச. 16:  கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க கோரி தஞ்சை மன்னார்குடி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

 தஞ்சை மாவட்டம், துறையுண்டார்கோட்டை ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுநாள் வரை புயல் நிவாரணம் வழங்கவில்லை. அதே போல் உரிய முறையில் கணக்கெடுப்பும் நடத்தவில்லை.

எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் தெரு மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தஞ்சை மன்னார்குடி சாலையில் துறையுண்டார்கோட்டை பஸ் ஸ்டாப் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், சமாதானம் அடையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதன் பின்னர் ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் சமாதானம் அடைந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தஞ்சை அருகே போக்குவரத்து பாதிப்பு

Related Stories: