×

புயலால் மன அழுத்தத்தில் சிக்கியுள்ள மாணவர்களை மகிழ்விக்க புதுச்சேரி இளைஞர்கள் கோமாளி நாடகம்

முத்துப்பேட்டை, டிச.16: புயலால் மன அழுத்தம் மற்றும் இழப்புகளை சந்தித்துள்ள மாணவர்களை மகிழ்விக்க புதுச்சேரி இளைஞர்கள் கோமாளி வேடமணிந்து நாடகம் நடத்தினர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் கடந்த 15ம்தேதி நள்ளிரவு தாக்கிய கஜா புயலால் மக்கள் தங்களது வீடுகள், உடமைகள், பொருளாதாரங்கள், வாழ்வாதாரங்களை இழந்து பரிதவித்து வருகின்றனர். இதில் சிறுவர்கள், மாணவர்கள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் முத்துப்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புதுச்சேரியை சேர்ந்த யாழ் நாடகக்குழு, தன்னார்வ இளைஞர்கள் கஜா புயல் காரணமாக மன அழுத்தம் மற்றும் இழப்புகளை சந்தித்துள்ள மாணவர்களை மகிழ்வூட்டும் வகையில் கோமாளி வேடமணிந்து பேரிடர் மேலாண்மை, மரம் மற்றும் நீர் தொடர்பான விழிப்புணர்வு நாடகம், பாடல் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசியர் நித்தையன் தலைமை வகித்தார். ஜே.ஆர்.சி வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம், இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர்களை மகிழ்வூட்டும் வகையில் பாண்டிச்சேரியை சேர்ந்த யாழ் நாடகக்குழு தன்னார்வ இளைஞர்கள் கோமாளி வேடமணிந்து பேரிடர் மேலாண்மை, மரம் மற்றும் நீர் தொடர்பான விழிப்புணர்வு நாடகம், பாடல் நிகழ்வுகளை நடத்தினர். இதனை கண்ட மாணவர்கள் மகிழ்ச்சியடைந்து அவர்களுடன் சேர்ந்து நடித்து அசத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, அமிர்தம், இந்திரா, பெல்சிராணி, கௌதம், மேகநாதன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

Tags : Puducherry ,storms ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...