பொதுமக்களும் ஈடுபட்டால் புதுவை நகராட்சி அழகான நகரமாக மாறும்

புதுச்சேரி, டிச. 16:   மத்திய அரசின் மக்கள்தொடர்பு கள அலுவலகமும், புதுச்சேரி நகராட்சியும் இணைந்து முருங்கப்பாக்கத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கலைநிகழ்ச்சிகளை புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் துவக்கி வைத்து பேசும்போது, குப்பைகளை அகற்றுபவர்களுக்கே அதை அகற்றுவதற்கான பொறுப்பும் இருக்கிறது. அலட்சியமாக குப்பைகளை கையாள்பவர்களுக்கு நகராட்சி அபராதம் விதித்து வருகிறது.  அபராதம் விதிப்பது மக்களிடம் மனமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான். தூய்மை பணியில் நகராட்சியோடு பொதுமக்களும் ஈடுபட்டால் நகராட்சி தூய்மையாக அழகான நகரமாக மாறும் என்றார். சிறப்பு விருந்தினராக ஜெயமூர்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், கிராமம், நகரம் என 2 பகுதிகளுமே சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம் தான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை. சுகாதார சீர்கேட்டால் இன்று நாம் சுவாசிக்கும் காற்றுகூட ஆபத்தானதாக மாறி வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தான் பெரும்பகுதிகுப்பையாக மாறுகின்றன. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி பைகளை பயன்படுத்த நாம் முன்வர வேண்டும் என்றார். நகர நல அலுவலர் டாக்டர் கதிரேசன் விளக்க உரையாற்றினார். திரவுபதியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓவியம், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சத்தியமூர்த்தி அரசு மேல்நிலை பள்ளி என்எஸ்எஸ் மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது.

உழவர்கரை தொகுதி காங். தலைவர் நியமனம்

Related Stories: