ஆல்பா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி, டிச. 16:  புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆல்பா நிறுவனங்களின் சேர்மன் பாஷிங்கம், ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் தனதியாகு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் எல்கேஜி முதல் 9ம் வகுப்பு வரையிலான 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சுகாதார முறை, கணிப்பொறி, மீன் வளர்ப்பு முறை, காற்றாலை, மிருகக்காட்சி சாலை, சாலை விதி, உணவில், முக்கியத்துவம், முதலுதவி, தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து சாதனங்கள், எலும்பு கூட்டின் அமைப்பு, எரிமலை குழம்பு, இதயம், நுரையீரல், வயிற்றின் செயல்பாடு, செயற்கை கோள், படவீழ்த்தி, ஊசித்துளை படவீழ்த்தி, விண்கல பொறியியல் பெரிஸ்கோப், காற்றின் அழுத்தம், காற்று மாசுபடுதல், உணவு சங்கிலி, சிறுநீரக தோற்றம், மின்மோட்டார், விண்கலம் உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு வியத்தகு படைப்புகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. வகுப்பு வாரியாக சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: