மணக்குள விநாயகர் கல்லூரியில் 5வது பட்டமளிப்பு விழா

புதுச்சேரி, டிச. 16:    புதுவை கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 5வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. காக்னிசாண்ட் நிறுவன துணை தலைவரும், ஐசிடி அகாடமியின் தலைவருமான லட்சுமி நாராயணன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினார். மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன் எம்எல்ஏ., செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். புதுவை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 இடங்களை பிடித்த 30 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி சார்பில் பரிசாக 95 கிராம் தங்கம் மற்றும் 140 கிராம் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இஇஇ, இசிஇ, சிஎஸ்இ, ஐடி ஆகிய பிரிவுகளில் 611 பேருக்கும், எம்பிஏ, எம்டெக் இசிஇ, சிஎஸ்இ பிரிவுகளில் 124 பேருக்கும் என மொத்தம் 735 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜகோவிந்தன், துணை இயக்குநர் டாக்டர் காக்னே ராஜேந்திரகுமார், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி.

 மயிலம் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில், மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் காஞ்சனா, வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி முதல்வர் நளினி ராஜகோவிந்தன், மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி முதல்வர் தனுசு ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கல்லூரி வேலைவாய்ப்பு துறை தலைவர் ெஜயக்குமார், மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். கல்லூரி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை தலைவர் வள்ளி நன்றி கூறினார்.

Related Stories: