×

பெரியவெண்மணி கிராமத்தில் பாலத்தில் பெயர்த்த குழாய்களை விரைவில் சீரமைக்க வேண்டும்

பெரம்பலூர், டிச.12: பெரியவெண்மணி கிராமத்தில் கண்துடைப்புக்காக போடப் பட்ட சிறுபாலத்தில் பெயர்த்து போடப்பட்ட குழாய்களை சீரமைக்காததால் தண்ணீர் வீடுகளில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரியவெண்மணி கிராமம். இவ்வூர் நடுத்தெருவில் சிவன்கோயில் உள்ளது. இதன ருகே பல்வேறு தெருக்களில் இருந்து வழிந்தோடிவரும் கழிவுநீர், மழைநீர் ஒன்றி ணைந்து கடந்துசெல்ல தரமான பாலம்அமைத்து முழுமையாகத் தீர்வு காணாத ஊராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டுகளில் கான்கிரீட் குழாய்களை பொறுத்தி மண்ணை நிரப்பி கண்துடைப்புக்காக கழிநீர் வாய்க்காலை மூடியது.

கடந்த 2 வாரங்களுக்கு முன் பெய்த கனமழையின்போது மழைநீர் அடைப்பு ஏற்பட்டதால் குழாய்கள் பெயர்த்தெடுத்து போடப்பட்டது. பிறகு அதனை சரிசெய்யாமல் அப்படியே விட்டுவிட்டதால் தற்போது பெய்துவரும் சிறுமழைக்கும் சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. அதோடு மழைநீர் வழிந்தோட வழியின்றி இனி கனமழை பெய்தால் மழைநீர் தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெயர்த்து போடப்பட்ட கான்கிரீட் குழாய்களை தரமான சிறுபாலமாக மாற்றி அமைத்தாவது உடனடித் தீர்வு காணவேண்டும். அல்லது தரமான கான்கிரீட் பாலம் அமைத்து நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேப்பூர் ஒன்றிய நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : village ,Big Venveni ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...