×

25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் பெரம்பலூரில் ஸ்டார் விற்பனை விறுவிறுப்பு

பெரம்பலூர், டிச. 12: பெரம்பலூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் ஸ்டார்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
உலக அளவில் கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகையான கிறிஸ்துமஸ் பெருவிழா வருகிற 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்து இயேசுவின் பிறப்பை முன் கூட்டியே அறிவிப்பதற்காக வானில் தோன்றிய வால் நட்சத்திரத்தை அடையாளப்படுத்தும் வகையிலும், கிறிஸ்து இயேசுவை வரவேற்கும் விதமாகவும் கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதத்தில் தங்கள் வீடுகளில் ஸ்டார்களில் மின்விளக்குகளைப் பொருத்தி வீடுகளின் முகப்பிலும், உச்சியிலும் தொங்கவிட்டு அலங்கரிக்கின்றனர். இதனையொட்டி பெரம்பலூர் என்எஸ்பிரோடு, பள்ளிவாசல்தெரு, காமராஜர் வளைவு, போஸ்ட்ஆபீஸ் தெரு என பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஸ்டார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி