×

வேப்பூர் வட்டாரத்தில் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர், டிச.12: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா நேற்று வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறைகளின்மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை களஆய்வு செய்தார். இதனையொட்டி முதலாவதாக பேரளி கிராமத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களைப் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து வேப்பூர் வட்டாரம் பேரளி கிராமத்தில் படைகாத்து என்றவிவசாயியின் வயலில் திருந் திய நெல்சாகுபடி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள ஏடிடி&39 மத்திய கால நெல்ரக விதைப் பண்ணையை ஆய்வுசெய்தார். பிறகு தோட்டக்கலைத்துறையின் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலமாக கிருஷ்ணசாமி என்பவரது வயலில் பாலிதீன் சீட்கொண்டு மூடாக்குஇடப்பட்ட சம்மங்கி மலர் வயலைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அப்போது விவசாயி கிருஷ்ணசாமி கூறும்போது, இந்த வயலானது சொட்டுநீர்ப் பாசனமுறையில் அமைக்கப்பட்ட வயலா கும். பாலிதீன் சீட்கொண்டு மூடாக்கு இடுவதனால் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடிகிறது. பயிருக்கு பாய்ச்சிய நீர் சூரியவெப்பத்தால் ஆவியாவதைத் தடுக்க முடிகிறது. பிளாஸ்டிக் மூடாக்கு இடுவதற்கு ஒருஹெக்டேருக்கு ரூ32ஆயிரம் செலவா கிறது, அதில் 50சதவீதமான ரூ16ஆயிரம் மானியமாக பெறப்பட்டது எனத் தெரிவித் தார். அதோடு கிருஷ்ணசாமியின் நிலத்தில் வாழைக்கன்று நடவை கலெக்டர் சாந்தா நட்டு வைத்தார்.

Tags : area ,Vepur ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...