நோய்கள் பரவும் அபாயம் பொதுமக்களை தாக்கிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவரை இடமாற்றம் செய்யகோரி போலீசில் புகார் மனு

பேராவூரணி, டிச. 12: பேராவூரணி அருகே பொதுமக்களை தாக்கிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவரை இடமாற்றம் செய்யகோரி போலீசில் புகார் செய்யப்பட்டது.பேராவூரணி அடுத்த காலகம் ஊராட்சி அஞ்சூரணிக்காடு கிராமத்தில் குடிநீர் குழாயில் விநியோகிக்கப்படும் தண்ணீர் அசுத்தமாகவும், நிறம் மாறி கலங்கலாகவும் இருந்தது. இதனால் சுத்தம் செய்து தருமாறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவரான ராஜேந்திரன் என்பவரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றுaம் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கிராம மக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கிராம பொதுமக்கள் தாங்களாகவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து உள்ளே இறங்கி பார்த்தபோது தொட்டியில் ஒரு அடி ஆழத்துக்கு சேறும் சகதியுமாக மணல் இருந்தது. இதையடுத்து ஊராட்சி செயலாளர்  ஆலோசனையின்பேரில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் மகன் கண்ணன் (35) மற்றும் 10 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டியை சுத்தம் செய்துள்ளனர்.  

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவரான ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள்  செந்தில், நாகரத்தினம், விஜயன், செல்வானந்தம், சின்னக்கண்ணு ஆகிய 6 பேரும் சேர்ந்து நீங்கள் எப்படி தொட்டியை சுத்தம் செய்யலாம் என்று கூறி கண்ணன் மற்றும் அவருடன் தொட்டியை சுத்தம் செய்தவர்களை தாக்கினர். தொட்டியை சுத்தம் செய்தவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவரான ராஜேந்திரனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே கண்ணன் மற்றும் சிலர் தாக்கியதாக ராஜேந்திரன் தரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: