அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்த ஆலோசனை கூட்டம்

தஞ்சை, டிச. 12: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த  வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 நிர்ணயம் செய்ய  வேண்டும். ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும். கட்டுமானம்  உடலுழைப்பு விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு  சமூக பாதுகாப்பு திட்டங்கள் கொண்டுவர வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை  ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புயலால் பாதித்த பகுதிகளை மத்திய மாநில அரசுகள் புறக்கணிக்க கூடாது. மத்திய, மாநில தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து வரும் ஜனவரி 8, 9ம் தேதிகளில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடக்கிறது.

இநநிலையில் தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஜனவரி 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் குறித்த வாயிற்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் சேவியர், ஜெயபால், தில்லைவனம், மோகன்ராஜ், ராஜன், முருகேசன் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் செல்வராஜ், கோவிந்தராஜு, சேவையா செல்வராஜ், ஜீவானந்தம் சாந்தி முன்னிலை வகித்தனர். இதில் திரளானோர்பங்கேற்றனர்.

Related Stories: