×

மழை சேதத்திலிருந்து நெற்பயிரை காப்பாற்றுவது எப்படி?

நாகை,டிச.12: நாகை கலெக்டர் சுரேஷ்குமார்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
டெல்டா மாவட்டங்களில் அண்மையில் பெய்த கனமழையினால் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெல் பயிரில் பல்வேறு நிலைகளில் பாதிப்பு காணப்படுகிறது. பாதிப்பு காணப்படும் நெல் பயிரினை பாதுகாக்க தொழில் நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம். வடிகால் வசதியுடைய இடங்களில் வயலில் தேங்கிய நீரினை உடனடியாக வடித்து பின்பு மேலுரமாக ஏக்கருக்கு அமோனியம் குளோரைடு 42 கிலோ அல்லது அமோனியம் சல்பேட் 50 கிலோ அல்லது யூரியா 22 கிலோவுடன் ஜிப்சம் 15 கிலோ மற்றும் வேப்பம்புண்ணாக்கு 4 கிலோவை முதல் நாள் கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து பின்பு பொட்டாஷ் 17 கிலோ கலந்து இடவேண்டும். இவ்வாறு செய்யும்போது ஊட்டச்சத்து விரையம் குறைந்து  வளர்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது.
தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் பயிர் பாதியளவு நீரில் மூழ்கியிருக்கும் நிலையில் பயிர் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் துத்தநாகம் மற்றும் தழைச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியாவும், 1 கிலோ ஜிங்க் சல்பேட்டும் கலந்து கைத்தெளிப்பான மூலம் தெளிக்க வேண்டும், மேலுரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.

பாக்டீரியா இலைக்கருகல் நோயின் அறிகுறி காணப்பட்டவுடன் தழைச்சத்து  உரமிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் 20 சதம் பசுஞ்சாணக் கரைசல் அதாவது 40  கிலோ புதிய சாணத்தை 100 லிட்டா; நீpல் கரைத்து 12 மணிநேரம் ஊறவைத்து  பின்பு தெளிந்த நீரை வடித்து இத்துடன் 100 லிட்டா; நீரைக் கலந்து 200  லிட்டராக்கி தெளிக்கவும். அல்லது ஏக்கருக்கு சூடோமோனாஸ் 1 கிலோ அல்லது  ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்டுடன் டெட்டாசைக்ளின் கலந்த மருந்து கலவை 120  கிராமுடன் காப்பா; ஆக்ஸிகுளோரைடு 500 கிராம் அல்லது காப்பா; ஹைட்ராக்சைடு  500 கிராம் என்ற அளவில் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை  தெளிக்க வேண்டும்.

இலை உறை கருகல் நோய்: நோயின் அறிகுறி  தென்பட்டவுடன் 1 ஏக்கருக்கு கார்பன்டாசிம் 200 கிராம் அல்லது  புரோபிகோனாசோல் 200 மிலி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து  கைதெளிப்பான் மூலம் தெளிக்கவும். பயிர் பாதுகாப்பு மற்றும் உர மேலாண்மை  தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாண்டு நெற்பயிரை வெள்ளம் மற்றும் மழை  சேதத்திலிருந்து காப்பாற்றிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இலைசுருட்டு புழு, தண்டு துளைப்பான்பொருளாதார சேத நிலையான வளர்ச்சி பருவத்தில் 10 சதவீதம் பாதித்த இலைகளும் பூக்கும் தருணத்தில் 5 சதவீதம் பாதித்த இலைகளும் காணப்பட்டால் வேப்ப எண்ணெய் 3 சதம் அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 60 மிலி 200 லி தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் மூலம் தெளிக்கவும்.



Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...