×

கடற்கரை தூய்மைப்பணி பெண்களுக்கு விழிப்புணர்வு

தரங்கம்பாடி,டிச.12: தரங்கம்பாடி அருகே உள்ள சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் பெண்களுக்கு கடற்கரை தூய்மை செயல்பாடு குறித்து விழிப்புனர்வு அளிக்கபட்டது.நாகை மாவட்டம் சந்திரபாடி மீனவ கிராமத்தில் கிராமிய சமூக நல சங்கத்தின் சார்பில் கடற்கரை தூய்மை செயல்பாடு குறித்து விழிப்புனர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிராமிய சமூக நல சங்கத்தின் இயக்குநர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கடற்கரை தூய்மை செயல்பாடு குறித்தும் பருவநிலை மாற்றம், மற்றும் கடல்சேர் குப்பை தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து  மீனவ பெண்களுக்கு விழிப்புணர்வு அளிக்கபட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து சந்திரபாடி கடற்கரையில் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். செம்பனார்கோவில்,டிச.12: செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழக வானிலை ஆய்வு மையம் புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாகி புயலாக மாறி வருகின்ற 14ம் தேதி கரையை கடக்க  கூடும் என்று கூறியதை அடுத்து நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் ஊராட்சி செயலர்களுக்கு புயலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஊராட்சி செயலர்களுக்கு எடுத்து கூறினார். அதில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளில் வசிப்பவருக்கு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். பள்ளி சத்துணவுக்கூட சமையல் பாத்திரங்கள் மற்றும் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் நாளை (13ம் தேதி) இரவுக்குள் முழுமையாக நீரேற்றம் செய்யப்பட்டு குளோரினேஷன் செய்யப்பட வேண்டும்.  
மின்தடை வருவதற்கு முன்பே நீர்தேக்க தொட்டிகளை முழு கொள்ளளவுடன் இருப்பதை கண்காணிக்கப்பட வேண்டும்.  மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பவர் ஜெனரேட்டர்கள் மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் எடுத்து வைக்க வேண்டும்.  போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை குறித்து கூறினார்.  இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியத்தை சார்ந்த 57 ஊராட்சி செயலர்கள் கலந்துக் கொண்டனர்.


Tags : women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...