×

முத்துப்பேட்டையில் கஜா புயலால் பாதித்தோருக்கு கான்கிரீட் வீடு கட்டித்தர கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

முத்துப்பேட்டை, டிச.12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்படவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பேரூராட்சியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் செல்லத்துரை வரவேற்றார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்தின், நகர செயலாளர் காளிமுத்து, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வீரசேகரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் உப்பூர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.

இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை காங்கிரட் வீடுகளாக மாற்றித்தர கோரியும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரியும், புயலால் பாதிக்கப்பட்டு இறந்து போன கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், புயலில் சேதமான கூறை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடு என பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் தலா ஒரு லட்சம் அறிவிக்க வேண்டும் என  போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் நிவாரணம் பெற இப்பகுதி பொறுப்பு அதிகாரியை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் 3 சுமார் மணிநேரத்திற்கு மேலாக நீடித்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் பேரூராட்சி வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் தங்கமணி ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் இலவசமாக வீடு வழங்க கோரிய விண்ணப்பங்களை பெற்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Siege ,Panorama ,victims ,house ,Ghazipur ,
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...