×

அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

திருவாரூர், டிச.12: அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகள், தொகுப்பு வீடுகள், ஒட்டு வீடுகள் மற்றும் சேதமடைந்த மாடி வீடுகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி நிவாரண தொகையாக ரூ 25 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவாரூர்  வட்டாச்சியர் அலுவலக வாயிலில் அக்கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகள், தொகுப்பு வீடுகள், ஒட்டு வீடுகள் மற்றும் சேதமடைந்த மாடி வீடுகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி நிவாரண தொகையாக ரூ 25 ஆயிரம் வழங்க வேண்டும், புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும், மின்சாரம், குடிநீர் இதுவரை கிடைக்காத கிராமங்களுக்கு போர்க்கால அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில்  சார்பில் திருவாரூர் தாசில்தார் அலுவலக வாயிலில் அக்கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் போராட்டத்தை துவக்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டக்குழு சாமியப்பன், ஒன்றிய செயலாளர் இடும்பையன், ஒன்றியக்குழு நிர்வாகிகள் மாதவன், பவுன்ராஜ், சேகர், ரகுபதி, சுபா, ஜெயபால், ரேணுகா, ராஜாங்கம், கோசிமணி ஆகியோர் பேசினர். இதில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி சார்பில், காஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனே நிவாரணம் வழங்கக்கோரி நேற்று காலை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு பாலசுப்ரமணியன், மாவட்டக்குழு கைலாசம், ஒன்றியக்குழு ஜோசப், அண்ணாதுரை, பூசாந்திரம், முணியான்டி, சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 அயிரம் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் ரூ.15 அயிரம் வழங்க வேண்டும உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Tags : waiter ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தாரிடம் மனு