குழுமணியில் இருந்த வாரச்சந்தை கட்டிடத்தை இடித்த மர்ம நபர்கள் நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை

திருச்சி, டிச.12:  திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் குழுமணியில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வாரச்சந்தைக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஊராட்சி ஒன்றியம் மூலம் ஏலம் விடப்படும். கடந்த 2010ம் ஆண்டு ஊராட்சி ஒன்றியத்தின் பொது நிதி மூலம் ரூ.4.50 லட்சம் மதிப்பில் வணிக வளாக கடைகளுக்கு மேற்கூரை, மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் வியாபாரிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் வாரசந்தை சாலை ஓரமாக நடத்தப்பட்டு வந்தது. பொதுமக்கள் வராத நிலையில் திடீரென சில ஆண்டுக்கு முன் கடையில் போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள், இரும்பு பைப்புகள் ஆகியவை மாயமானது. தொடர்ந்து மேற்கூரை இல்லாமல் கடைகள் மட்டும் இருந்தது.

இந்நிலையில் கடைகளின் சுவரை இடித்து செங்கல் கற்களை மர்ம ஆசாமிகள் எடுத்து சென்றுள்ளனர். மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டிடத்தினை இடிப்பதற்கு முறையாக ஊரக வளர்ச்சி துணை செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் இடித்ததாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் முறையான விசாரணை நடத்தி நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.

Related Stories: