ஓஎப்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியூசியினர் 4 பேர் உண்ணாவிரதம்

திருவெறும்பூர்,  டிச.12:  கோரிக்கைகளை வலியுறுத்தி ஓஎப்டியில் ஐஎன்டியூசியினர் 4 பேர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு துறை  நிறுவனங்களில் ஒன்றாக துப்பாக்கி தொழிற்சாலை (ஓஎப்டி) உள்ளது.  இந்த தொழிற்சாலை  நிர்வாகத்தில் உள்ள  அனைத்து உற்பத்தி பிரிவிற்கும் போதுமான உற்பத்தி  இலக்கை வழங்க வேண்டும். தொழிலாளர்களை துன்புறுத்துவதும், தொழிற்சங்க  பிரதிநிதிகளை பழிவாங்கும் போக்கினையும் துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகம்  கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்படும் வகையில் திருச்சி  நிறுவன கண்டுபிடிப்பான டார் மற்றும் வெப்பன்களின் உதிரி பாகங்களின் விலை  குறைப்பை கைவிட வேண்டும்.

மேலும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும்  உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  துப்பாக்கி தொழிற்சாலை ஐஎன்டியூசி தொழிற்சங்கம் சார்பில் அதன் தலைவர்  வேதநாயகம் தலைமையில், இணை செயலாளர் பாஸ்கர், உதவி செயலாளர் பாஸ்கர்  ஆரோக்கியதாஸ், அமைப்பு செயலாளர் போப்ஜேக்கப் ஆகிய 4 பேர் நேற்று காலை  தொழிற்சாலை முன் காலவரையரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.  முன்னதாக பொதுச்செயலாளர் சந்திரசேகரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து, அதன் அவசியம் குறித்து தொழிலாளர்களிடம் விளக்கி பேசினார்.

Related Stories: