வீரகனூரில் தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு விழா ஏற்பாடுகளை எஸ்பி நேரில் ஆய்வு

கெங்கவல்லி, டிச.12:  வீரகனூரில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ள அரசு விழாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜ் ேநரில் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்காவில் வரும் 14ம் தேதி, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் வீரகனூரில் ₹100 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இதேபோல், வாழப்பாடி, மல்லியகரை, கீரிப்பட்டி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கூடமலை, கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர், தலைவாசல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதியிலும் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, வீரகனூரில் அரசு விழா நடைபெறும், சந்தைபேட்டை பகுதியில், எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு குறித்தும், பொதுமக்கள் வந்து செல்லும் வசதி, வாகன நிறுத்தும் பகுதியை ஆய்வு செய்தார். சில இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்தார். இந்த ஆய்வின்போது, வீரகனூர் இன்ஸ்பெக்டர் சண்முகம், மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Related Stories: