மகுடஞ்சாவடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

இளம்பிள்ளை, டிச.12: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம், ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம் தலைமையில் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து வரவேற்றார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணிக்குழு செயலாளர் பார்த்திபன், கழக சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ காவேரி, மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகன், கொங்கணாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் நிர்மலா மற்றும் நிர்வாகிகள் கமலக்கண்ணன், மகேந்திரன், அரிமா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கழக ஆக்கப்பணிகள் பற்றியும், கலைஞர் சிலை திறப்பு விழாவில் திரளாக கலந்து கொள்வது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: