சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச. 12: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் அம்மாசி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் நம்புராஜன், மாநில பொருளாளர் சக்கரவர்த்தி ஆகியோர் பேசினர். அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை கட்டணம் அளிக்க வேண்டும். சுவிதா உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும், தட்கல் டிக்கெட்டுகளிலும் ஒரே மாதிரியான 75 சதவீதம் கட்டண சலுகை அளிக்க வேண்டும். கீழ் படுக்கை ஒதுக்கீடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப்படுத்த வேண்டும்.

ரயில்வே பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்க ரோஸ்டர் முறையை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சரவணன், புனிதா, ராஜேஸ், திருப்பதி, சாமுண்டீஸ்வரி, பாலு, நடராஜன், ஜோதிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: