ரங்கத்தில் பகல்பத்து 4ம் நாள் விழா சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

திருச்சி, டிச.12:  ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து 4ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.ரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 7ம்தேதி வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து உற்சவம் துவங்கியது. விழாவின் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை அலங்காரத்தில் ரத்ன அபயஹ ஸ்தம், மகாலட்சுமி பதக்கம், தங்க காசு மாலை, பவளமணி மாலை, 18 ஆரமுத்தாரம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் புறப்பட்டு பகல்பத்து ஆஸ்தான மண்டபமான அர்ச்சுண மண்டபத்திற்கு காலை 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அதன்பின், காலை 7.45 மணி முதல் மதியம் 12 மணி வரை அரையர் சேவையாக பொதுமக்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

அரையர் 2ம் சேவையாக கம்சவதம் நிகழ்ச்சியுடன் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.  அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு உபயகாரர்கள் மரியாதையுடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு மாலை 6 மணி வரை காட்சி அளித்தார். அதன் பின் நம்பெருமாள் 7 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மூலவர் பெரிய பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Related Stories: