கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறி போலீசாரை கண்டித்து பெண்கள் போராட்டம்

சேலம், டிச.12:  மாநிலம் முழுவதும் பெண்களை பாதுகாக்க வேண்டிய மகளிர் காவல்நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்து, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் போலீசாரை கண்டித்து சேலம் தலைமை தபால்நிலையம் முன்பு, தமிழ்நாடு பெண்கள் சங்கத்தினரும், தமிழ்நாடு வீட்டு பணிப்பெண்கள் சங்கத்தினரும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  பெண்கள் சங்க மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுமதியம்மாள், பொருளாளர் கலைவாணி முன்னிலை வகித்தனர்.

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இதில், நிர்வாகிகள் கவிதா, கோகுல், சுமன், ஈஸ்வரி, மேகலா, மஞ்சு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: