×

இளைஞர்களுக்கு தென்னை ஏறுதல் பயிற்சி

கிருஷ்ணகிரி, டிச.12:  கிருஷ்ணகிரி  மாவட்டம் எலுமிச்சங்கிரியில் உள்ள ஐசிஆர் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும்  தென்னை வளர்ச்சி மையம் சார்பில், நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறுதல்  குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 6 நாள் பயிற்சியானது நேற்று முன்தினம்  தொடங்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி, சவுக்குப்பள்ளம், பெல்லாரம்பள்ளி,  திருவண்ணாமலை, பர்கூர், ராமன்தொட்டி பகுதிகளில் உள்ள இருளர் இனத்தை  சேர்ந்த 20 இளைஞர்கள் பயிற்சி பெற்றனர். வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் சுந்தர்ராஜ் கூறியதாவது:  

தென்னை மரம் ஏறும் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மரம் ஏறும் பயிற்சி  மட்டும் வழங்காமல், தென்னையில் மகசூலை அதிகரிக்க சாகுபடி தொழில்நுட்பங்கள்  வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்று வரும் இளைஞர்களுக்கு தங்குமிடம் மற்றும்  உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சியின் முடிவில் 20 பேருக்கும்  தலா ₹10 ஆயரம் மதிப்பிலான தென்னை மரம் ஏறும் நவீன இயந்திரம் மற்றும்  சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 80 பேருக்கு  பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேருக்கு பயிற்சி  அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியின் மூலம் பல பேர் வேலைவாய்ப்பை  பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது