×

தேன்கனிக்கோட்டையில் குட்டைபோல் மாறிய சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போலீசார் சமாதானம்

தேன்கனிக்கோட்டை, டிச.12: தேன்கனிக்கோட்டையில் குட்டைபோல் மாறிய சாலையை சீரமைக்க கோரி மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கடந்த சில மாதங்களாக வெளியேறும் இந்த தண்ணீர் சாலையில் தேங்கியுளளது. தற்போது அங்கு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையின் நடுவே உள்ள இரண்டு பள்ளங்களால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். நான்கு வாகனங்கள் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ளன.

பைபாஸ் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், லாரி, அரசு பஸ், தனியார் பஸ், பள்ளி வாகனஙகள் வந்து செல்கின்றன. அடிக்கடி வாகங்கள் பள்ளத்தில் சிக்கி கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் மக்கள் தெரிவித்தபோதும் குழாய் சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தனியார் பள்ளி பஸ்சை வழிமறித்து சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மக்களை சமாதானப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இத்தகவலால் பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும், குடிநீர் வீணாக சென்ற பைப்லைனும் சரி செய்யப்பட்டது.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...